23.1.13

ரணம்

தூரம் காரணமாய்..
தூரத்து உறவுகளின்
துயரம் மறந்ததேனோ?
 கொஞ்சம் நஞ்சம்
ஒட்டியிருந்த ஈரத்தை…
இதயத்தின் ஈரத்தை..
துடைத்து உலர்த்தியதேனோ?
 
அழ
ஆவேசப்பட,
கை கொடுக்க,
துயர் துடைக்க,
 
தோள் கொடுக்க
 
இனம்..
மொழி...
உறவு....
எந்த ஒற்றுமையும்
வேண்டாம்
மனிதம் இருந்தால் போதும்!
 
கண்கள் மூடு,
ஒரு நிமிடம்
உன்னை அங்கு நிறுத்தி
சித்தரி…
 
அடி
உதை
 
காயம்
குண்டு மழை
முள் வேலி
பச்சிளம்...இரத்தம்... பரிதாபம்
இன்னும் சொல்ல வாய் கூசும்
ரணம்
 
மூடிய இமைக்குள்
உன் விழித் திரையிலும்
 இரத்தம் கசியும்..
 
இப்போது சொல்
அழ
ஆவேசப்பட
கை கொடுக்க
துயர் துடைக்க
தோள் கொடுக்க
இனம்..
மொழி...
உறவு....
எந்த ஒற்றுமையும்
வேண்டாம்
மனிதம் இருந்தால் போதும் !


- நிபுணா

1 comment:

  1. அருமை.... வசந்த்...

    எதிர்நிற்கும் மனிதனின் அடையாள வேறுபாட்டில்
    வெறுப்படையும் உலகம்
    அவனையும் மனிதனெனக் கொள்ளத் தயங்குகிறது...

    பிரித்து ஆள மதம் படைத்த அன்றே
    நமக்கும் மதம் பிடித்து விட்டது...

    நீதிக்கதைகளின் நீதியை மறந்து
    கதைமாந்தர்களை வழிபட்டு என்ன பயன்?

    இன்னொரு மனிதனின் குருதி வழிய
    சுகம் கொள்ளும் குரூர இனத்தில் பிறந்து விட்டு
    பசிக்குக் கொல்லும் விலங்குகளை மிருகம் எனக் கூறுகிறோம்.

    மாறுவோம்...
    முதலில் மனிதனை மனிதனாய் பார்க்கும்
    மனிதனாய் மாறுவோம்....
    மூளையின் மூலையில் - இதய அறைகளில்
    எங்கேயோ ஓரிடத்தில்
    மனிதம் ஒளிந்திருக்கும்...
    வெறுத்தொழிக்க ஆயிரம் காரணம் இங்கிருக்க
    நம் மனது
    அனைவரையும் ஏற்க விரும்புவதில்லை...
    மாற்றம் தொடங்குவது நம்மிடம் இருந்தே...
    நாம் தொடங்குவோம்... மனிதனாக மாற....

    - கணபதிராமன்

    ReplyDelete